Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூட் தல என்று கூறி பயணிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய ரவுடி மாணவன்:! நீதிபதியின் நூதன தீர்ப்பு!!

ரூட் தல என்று கூறி பயணிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய ரவுடி மாணவன்:! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!!

சென்னை புறநகர் ரயிலில் பயணிகளிடம் ரூட்டு தல என்று கூறி மாணவன் ஒருவன் கதியை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் குட்டி என்ற மாணவன் சக மாணவர்களுடன் சேர்ந்து ரூட்டு தல என்று கூறி ரயில் நிலையத்திற்கு வருபவர்களிடம் கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை அடுத்து தனக்கு முன் ஜாமீன் வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.நீதிபதி மாணவனின் தந்தையை கூப்பிட்டு விசாரணை நடத்தினார்.தான் ஒரு சிறிய ஹோட்டலில் காசாளராக பணிபுரிவதாகவும் ரொம்ப கஷ்டப்பட்டு தன் மகனை படிக்க வைப்பதாகவும் கூறியதையடுத்து,மாணவரின் நலன் கருதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா,மாணவனுக்கு நூதன தண்டனையை வழங்கியுள்ளார்.

அதாவது நான்கு வாரங்களுக்கு சனிக்கிழமையன்று உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான நித்திரா மறுவாழ்வு மையத்திற்குச் சென்று அங்குள்ள பராமரிப்பாளர்களுக்கு உதவ வேண்டுமென்றும்,இதற்கான அறிக்கையை விடுதிக்காப்பாளரிடம் வரம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறி நிபந்தனையோடு அம்மாணவனுக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளார் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அவர்கள்.

Exit mobile version