Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் பட்டியலில் 6வது இடம் பிடித்த முதல் இந்திய நடிகரின் சம்பளம்

2020 ஆம் ஆண்டுக்கான நடிகர்கள் வாங்கும் சம்பள பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டது.

இதில் உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் பட்டியலில் முதல் இந்தியராக ஆறாவது இடத்தை அக்ஷய்குமார் பிடித்துள்ளார். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ராக் டுவைன் ஜான்சன், மார்க் வால்பெர்க், ரியான் ரெனால்ட்ஸ், ஆடம் சாண்ட்லர், பென் அஃப்லெக், வின் டீசல், ஜாக்கிசான், வில் ஸ்மித் மற்றும் லின்-மானுவல் மிராண்டோ ஆகியோர் அடங்குவர்.


இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முதலாவதாக இடம் பிடித்த இந்திய நடிகர் என்ற பெயரை நடிகர் அக்ஷய்குமார் பெற்றுள்ளார்.

அதில் அவர், 48.5 மில்லியன் டாலராக சம்பளம் பெற்று இருப்பதாக பட்டியலில் உள்ளது. முதலிடத்தில் உள்ள டுவைன் ஜான்சன் இந்த ஆண்டில் 87.5 டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டாவது வருடமாக இந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த சம்பளப்பட்டியல் ஆனது 2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரை பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version