அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

0
96
#image_title

அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

அம்மை நோய் வந்து குணமாண நபர்களுக்கு முகத்தில் உடலில் என்று தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகள் மறையச் செய்வதற்கு நாம் செயற்கையான மருந்து பொருட்களையே அதிகம் பயன்படுத்துகின்றோம். இந்த செயற்கை மருந்து பொருட்களால் பலன் வேகமாக கிடைக்கும் என்பது சரி. ஆனால் பின்னால் ஏதேனும் பாதிப்புகள் வரக்கூடும்.

எனவே செயற்கையான மருந்துப் பொருட்களை விட இயற்கையான மருத்துவ வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலமாக நாம் எந்த வித பின் விளைவுகளும் இல்லாமல் இருக்கலாம். எனவே இயற்கையான இரண்டு வழிமுறைகளில் அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளை மறைய வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அம்மை நோய் தழும்புகளை மறையச் செய்ய வழிமுறை 1…

அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டும் என்றால் வேப்பிலை மற்றும் மஞ்சளை வைத்து நன்கு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த இந்த பேஸ்டை ஒரு பக்கெட் தண்ணீரில் இரவு நேரத்தில் கலந்து வைத்துவிட வேண்டும்.

பின்னர் மறுநாள் காலையில் எழுந்து இந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது அம்மை நோய் தழும்புகள் வேகமாக மறையும்.

அம்மை நோய் தழும்புகள் மறைய இரண்டாவது வழிமுறை…

அம்மை நோய் தழும்புகள் மறைய ஒரு ஸ்பூன் அளவு கசகசாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அரைத்துவிட்டு அந்த கசகசா விழுதில் சிறிதளவு கடலை மாவு மற்றும் பால் ஏடு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை அம்மை நோய் தழும்புகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் தழும்புகள் அனைத்தும் மறையாத தொடங்கும்.