பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்!
ஆந்திர மாநிலம் ,திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் நேற்று வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.அதன் பிறகு வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டிற்கு வந்த மாணவி சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் வந்துள்ளார்.
அந்த மாணவி போதையில் தள்ளாடி கொண்டே வீட்டிற்குள் சென்றுள்ளார்.அதனை கண்ட அந்த மாணவியின் தாய் அவரிடம் என்ன இது எல்லாம் என கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.அப்போது அந்த மாணவி சிறிதும் பதற்றம் இல்லாமலும் பயம் இல்லாமலும் பள்ளிக்கு அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா புகைத்தேன் என கூறியுள்ளார்.
அதனை கேட்ட தாய் கோபம் அடைந்து பள்ளிக்கு அருகில் இருக்கும் டீக்கடைக்கு சென்று கஞ்சா விற்பனை செய்வது தவறு என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த கடையின் உரிமையாளர் நாங்கள் ஒன்றும் உங்க மகளை குறிவைத்து வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை.அவர்தான் அவருடைய ஆண் நண்பர்களுடன் இங்கு வந்து கஞ்சா புகைத்து செல்கின்றார்.
பணம் கொடுத்தால் போதும் யாருக்கு வேண்டுமானாலும் நாங்கள் விற்பனை செய்வோம் என அசால்ட்டாக பதில் அளித்துள்ளார்.அதனை தொடர்ந்து அந்த மாணவியின் தாய் பள்ளிக்கு அருகில் உள்ள டீ கடையில் கஞ்சா வீரப்பனை செய்வதாக சந்திரகிரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் எந்த விதமான போதை பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்து வரும் நிலையில் தற்போது பார்க்கும் இடங்களில் எல்லாம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.