சுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

0
134
The scorching summer sun! Holidays for schools from May 2!

சுட்டெரிக்கும் கோடை வெயில்! மே 2 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

கொரோனா மூன்றாவது அலையெல்லாம் முடிந்து தற்பொழுது தன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் எடுக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் பாதிப்புகள் முடிவடைந்து மாணவர்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளை பயின்று வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் கோடை காலமும் ஆரம்பித்துவிட்டது.

ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் கோடை விடுமுறை அளிக்குமாறு முதன்மை மற்றும் இடைநிலை கல்வி இயக்குனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் மே இரண்டாம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இது குறித்தான ஒப்புதலை வழங்குமாறு மாநில கல்வித் துறையிடம் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் கொரோனா பரவல் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் சீரான முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதனால் தற்போது விடுமுறை அளித்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வி ஆண்டு சீரான முறையில் அமையும் இன்று கேட்டுள்ளனர்.

மேலும் விடுமுறை அளிக்கப்பட்டால் மீண்டும் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் அரசு கூற வேண்டும் என கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மகாராஷ்டிராவில் விதர்பாவில் அதிக அளவு கோடை வெயில் சுட்டெரிப்பது அங்கு மட்டும் ஜூன் 27-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கேட்டுள்ளனர். ஒரு கல்வி ஆண்டில் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 76 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டுமென்பதே முதன்மை மற்றும் இடைநிலை கல்வி இயக்குனர்களின் கோரிக்கை. தற்பொழுது கோடை விடுமுறை விடுவதால், உள்ளூர் விடுமுறையும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வரலாம். அதனை சரி செய்ய தீபாவளி அல்லது கோடை விடுமுறையை குறைக்கலாம் என கூறியுள்ளனர்.