கொளுத்தும் கோடை வெயில்!! கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம்!! வேதனையில் பொதுமக்கள்!!
டெல்லியில் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 125-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் அதிகாரதி வருகின்றது. தலைநகரில் வெப்ப நிலை 40.1 டிகிரி செல்சியர்ஸ் ஆக காணப்பட்டது. கடந்த 1945-ஆம் ஆண்டில் தான் இது போன்ற வேபநிலை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதநிடையில் தற்போது டெல்லியில் கடுமையான வெப்பம் வீசுவதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது இதனால் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசயிகள் கோடை வெய்யிலைத் தடுக்க மோர், லசி போன்றவற்றை அருந்தி உடலை குலுமைபடுத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாலம் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதத்தில் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இதேபோன்று டெல்லியின் சஃப்தார்ஜுங் பகுதியில் 46.0 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இது கடந்த 18 ஆண்டுகளாக அங்கு காணப்படாத அளவு வெயில் ஆகும். அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்னே டெல்லியில் வெயில் ஆரம்பித்து விட்டது. அதிகப்பட்சமாக அங்கு 104.18 டிகிரி வெப்பம் பதிவானது. வழக்கத்தை விட 8 டிகிரி அளவு வெப்பம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்களை தெரிவித்துள்ளனர்.