Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென உள்வாங்கிய கடல்!! அதிர்ச்சியில் கதறும் மக்கள்!!

The sea suddenly absorbed!! People screaming in shock!!

The sea suddenly absorbed!! People screaming in shock!!

Thiruchendur: திருச்செந்தூரில் உள்ள கடல் திடீரென 50 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இதனால் அங்குள்ள மக்கள் வரும் ஆபத்தை எதிர்கொள்ளாமல் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

திருச்செந்தூர் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பனிமய மாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு  அங்கு ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த இடம் திருவிழா போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் கோவில் கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கி இருக்கிறது.

நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 400 மீட்டருக்கு கடல் உள்வாங்கி இருக்கிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமி வர உள்ள நிலையில் இப்படி எப்போதும் கடல் உள்வாங்கும் என அங்குள்ள உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அந்த நிலையில் உள்வாங்கி உள்ள கடல் பகுதியில் உடைந்த சிலைகள் இருக்கின்றன. அந்த சிலைகள் எல்லாம் வேறு பகுதியில் இருந்து வீசப்பட்டிருக்கும் என அங்குள்ள மக்கள் கூறுகின்றன.

அது மட்டும் அல்லாமல் அந்த சிலைகளை மக்கள் கரையில் எடுத்து வைத்துள்ளார்கள். இப்படி உள்வாங்கிய கடலில் இருந்து பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. அதில் கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். உள்வாங்கிய கடல் மீண்டும் கொந்தளித்து மேலே வந்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும். அது மட்டும் அல்லாமல் உள்வாங்கிய கடலில் மக்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்கின்றனர்.

Exit mobile version