அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! திமுகவில் பரபரப்பு!

0
147
பிடிஆர் ஆடியோ பெறும் பரபரப்பில் தமிழக அரசியல் களம்
அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! திமுகவில் பரபரப்பு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பி வருகிறார். திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு அது தொடார்பாக சிபிஐயிடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற மற்றொரு ஆடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
அதிலும் முன்பு வெளியிட்ட முதல் ஆடியோவில் உள்ள குரல் இதிலும் பதிவாகி உள்ளது. அதில், ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு உட்பட்டு, நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும், மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு புரிந்திருக்க வேண்டுமல்லவா?, ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும், எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர்.
நிதி மேலான்மை செய்வது சுலபம். இது ஒரு அமைப்பா அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும், மருமகனும் தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள். 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்துவிட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது.
எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால். இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினயாக அவர்களுக்கே திரும்பி அடிக்கும்.
இதனை எப்படி சொல்வது, நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன். நான் அந்த பதவியில் இல்லாத போது அதனை பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை. இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் குரல் பதிவு என்று அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த ஆடியோ விவகாரம் தற்போது மீண்டும் ஒரு பூகம்பத்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அதுவும் தான் திமுகவிலிருந்து விலகினால் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.