ஆக்சன் கிங்கின் ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி!

0
137

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க அப்படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோகன் முடிவெடுத்துள்ளார்.

இவருடைய தயாரிப்பிலேயே பிளாக்பஸ்டர் மூவி ஆக ஜென்டில்மேன் திகழ்ந்தது. ஆகையால் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை மீண்டும் தயாரிக்க தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் சுவாரசியம் என்னவென்றால் ஜென்டில்மேன்2 படமானது தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.

ஆக்சன் கிங் அர்ஜுன் முதல் பாகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அதே அளவிற்கு இரண்டாம் பாகத்திலும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்படத்தின் அறிவிப்பிற்கு பிறகு ரசிகர்கள் அனைவரும் ஜென்டில்மேன்2 எப்போ ரிலீஸ் ஆகப்போகுது என்ற ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.