நாளை இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்!! லட்சக்கணக்கான பெண்கள் ஏமாற்றம்!!

0
318
#image_title

நாளை இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்!! லட்சக்கணக்கான பெண்கள் ஏமாற்றம்!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டலின் வாக்குறுதி கொடுத்தார். அதன் பின் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் வரை கப் சிப் என்று இருந்த முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் இன்றி திமுக கூட்டணி கட்சியில் இருப்பவர்களும் விமர்சனம் செய்யத் தொடங்கினர்.

ஸ்டாலின் வெத்து வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார் என்று விமர்சனங்கள் எழத் தொடங்கவே வேறு வழியின்றி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தார்.

அதன்படி கடந்த ஜூலை மாதம் இந்த இந்த திட்டத்தை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் அறிவித்து அதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கியது.

இந்த திட்டத்திற்கு மொத்தம் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1 கோடியே 6 லட்சம் பேரின் விண்ணப்பங்களை மட்டுமே அரசு ஏற்றுக் கொண்டது.

சுமார் 60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் பலர் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த செப்டம்பர் 15, அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த திட்டத்தில் சேருவதற்கு முழு தகுதி இருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் நிராகரிகரிக்கப்பட்டனர்.

ஆனால் சொந்த வீடு, பெரிய எல்.இ.டி டிவி உள்ளிட்டவைகள் வைத்திருப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட ஏழை பெண்கள் பலர் திமுக அரசை கடுமையாக சாடினர்.

இந்த திட்டத்தை திமுக அரசு தொடங்கியும் ஒரு பயனும் இல்லை மக்கள், பெண்களுக்கு திமுக அரசு மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது.

அதன் பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பெண்கள் தங்கள் விண்ணப்பத்தை மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதற்காக ஒரு மாதம் கால அவகாசம் வழங்கிய நிலையில் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் லட்சக்கணக்கான பெண்கள் இ- சேவை மையத்திற்கு படையெடுக்க தொடங்கினர். அரசு அவகாசம் வழங்கிய 30 நாட்களில் முதல் 10 நாள் இ-சேவை மையத்தில் விண்ணப்பிப்பதற்கான இணையதள லிங்க் வேலை செய்யாமல் போனது. இதனால் பெண்கள் விண்ணப்பம் செய்ய முடியாமல் கடும் அவதி யடைந்தனர்.

அதன் பின்னர் லிங்க் வேலை செய்யத் தொடங்கிய நிலையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 60 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் வெறும் 11.85 லட்சம் பேரை மட்டுமே இந்த மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்களாக அரசு தேர்வு செய்து இருக்கிறது.

இதனால் லட்சக்கணக்கான பெண்கள் கடும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். ஆளும் திமுக அரசு மீது பெண்கள், பொதுமக்கள் கடும் கோபத்தில் இருப்பதால் இவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11.85 லட்சம் பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்க இருக்கிறார்.