Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யோகி பாபுவின் சக்சஸ் சீக்ரெட்! மிரண்ட சக காமெடி  நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் இப்பொழுது டாப் காமெடியனாக இருப்பது யோகிபாபு தான். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஆரம்பித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

அவ்வளவு ஏன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் ஒரு படம் முழுவதும் ட்ராவல் செய்து பாக்ஸ் ஆபீசை அதிர வைத்துள்ளார் யோகி. 

யோகி பாபு தனது சக்சஸ் சீக்ரெட் இதுதாங்க என்று அறிவித்துள்ள செய்தி மற்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிரபு பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் அறிவுரையைப் பின்பற்றி தான் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளாராம். 

அப்படி கவுண்டமணி என்ன அட்வைஸ்  கொடுத்தார் எனக் கேட்டதற்கு “எப்போதும் குறிக்கோள் மற்றும் கனவை நோக்கி ஓட வேண்டும், திரும்பி பார்க்கக் கூடாது” என்று கூறியுள்ளார் யோகிபாபு. இதுதான் அவரது வெற்றிக்கு காரணமாம்.

‘கோலமாவு கோகிலா’ படத்தை தொடர்ந்து அவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சில படங்கள் வெளியே வராமல் காத்துக் கொண்டும் இருக்கின்றன.

இவ்வாறு தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் தொடங்கி ஹீரோவாக மாறிய யோகிபாபுவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version