Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!

 

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்னும் ஊரில் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் ஒன்று அமைந்திருக்கின்றது. இவை தஞ்சாவூரில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை என்னும் ஊர் உள்ளது.இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த கோவிலின் மண் மிகவும் சக்தி நிறைந்தது. எனவே தான் இத்தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். 

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளது சிறப்பு ஆகும்.இத்தல பெருமாளை வழிபாடு செய்தால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நமது நம்பிக்கை.380 அடி நீளமும், 234 அடி அகலமும் கொண்டு கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தின் எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.கோயிலின் உள்பிரகாரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமன், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி, பால சாரநாதர் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில்.தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் விலக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் மக்களின் தவறை மன்னித்து அருள் பாலித்து வருகின்றார் சாரநாதப்பெருமாள்.

 

Exit mobile version