மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து..!!

0
266
The serial hero Muthu who wants to give an intro in another serial..!!

மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ முத்து..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்தாண்டு புதிதாக தொடங்கப்பட்ட இந்த சீரியல் வந்த உடனேயே பழைய சீரியல்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பிடித்து அசத்தி வருகிறது. 

இதில் ஹீரோவாக முத்து என்ற கேரக்டரில் நடிகர் வெற்றி வசந்த் நடித்து வருகிறார். முன்னதாக இவர் யூடியூப் குறும்படங்களில் நடித்து வந்த நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வெற்றியின் இந்த முத்து கேரக்டருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

ஏனெனில் இந்த கேரக்டர் நிஜத்தில் இருக்கும் நல்லவனை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். இந்த முத்துவிற்கு கோபம் வந்தால் அதை மறைத்து சிரித்து நடிக்க தெரியாது. தவறு என்றால் கோபப்படுவார், அடிப்பார் அதே சமயம மனிதாபிமானத்தோடும் நடந்து கொள்வார். அதனால் இந்த கேரக்டருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில், வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியல் தவிர இன்னொரு சீரியலிலும் அறிமுகமாக உள்ளார். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற சீரியலில் வெற்றி வசந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அவருடன் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை மகாவு கலந்துள்ளார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

வெற்றி வசந்த் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் பொன்னியின் அண்ணனாக சிறப்பு விருந்தினராக வந்து அசத்தி இருந்தார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சீரியலில் அவர் பங்கேற்று இருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.