தாயை ஏமாற்றி துன்புறுத்திய தந்தைக்கு தண்டனை வழங்கிய அதிர்ச்சி சம்பவம்!! தடுக்க வந்தவருக்கும் நேர்ந்த கதி!!
தாயை அடித்து துன்புறுத்தியதால் தந்தையை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா என்ற நகரில் உள்ள பல்லு கேரா கிராமத்தில் வசித்து வருபவர் விக்ரமஜித் ராவ். இவரது மகன் ஜாஸ்மின். விக்ரமஜித் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவியை அடித்து, தினமும் துன்பப்படுத்தி வந்துள்ளார்.
அவரது சித்திரவதை தாங்க முடியாத ஜாஸ்மினின் தாய் குழந்தைகளுடன் வெளியேறி உள்ளார். மேலும் தனது கணவனிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான நடைமுறைகளையும் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் கிரேட்டர் நொய்டா பகுதியில் விக்கிரமஜித் தனியாக வசித்து வந்துள்ளார்.
குடும்பத்துடன் இருந்து பின்னர் தனியாக பிரிந்து சென்ற ஜாஸ்மின் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த சூழ்நிலையில் திரைப்பட படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டு வரும் கட்டிட பகுதியில் ஜாஸ்மினின் தந்தை விக்ரமஜித் மற்றும் அவருடைய தந்தை இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களை நோக்கிச் சென்ற ஜாஸ்மின் கோடரி ஒன்றை எடுத்து தந்தையின் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தாக்கினார். அப்போது தடுக்க வந்த விக்ரமஜித்தின் தந்தையான ராம்குமாருக்கும் கோடாரியால் வெட்டு விழுந்தது.
மேலும் ராம்குமார் சற்று நகரவே அவர் உயிர் தப்பி விடுவார் என்ற பயத்தில் ஜாஸ்மின் சுத்தியலால் பலமுறை அவருடைய தலையில் கடுமையாக அடித்துள்ளார். பின்னர் இருவரையும் தாக்கிய ஆயுதங்களை அருகில் உள்ள கழிவறையில் விசிறி விட்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு சென்று ரத்தக்கரை படிந்த ஆடைகளை கலைந்து துவைத்து விட்டு குளித்துள்ளார்.
பின்னர் எதுவும் நடக்காதது போல தனது வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஜாஸ்மின் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்று ஆஜர் படுத்தினார்.