Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்காவின் பிரபல ஷாப்பிங் மாலில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் – அதிர்ச்சியில் மக்கள்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கீ நகரில் இருக்கும் மே பீல்டு ஷாப்பிங் மாலில், திடீரென கண்மூடித்தனமான ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் அதிகமாகக் கூடும் இடமான ஷாப்பிங் மாலில் இச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் காணப்படுகின்றனர்.

அதாவது ஒரு துப்பாக்கியுடன் அந்த ஷாப்பிங் மாலுக்கு அந்த சிறுவன் அங்கிருக்கும் மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் இவ்வாறு இந்த சிறுவன் கண்மூடித்தனமாக சுட்டதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒரு சிறுவன் உள்பட எட்டு நபர்கள் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய அச்சிறுவன் சுட்டவுடன் தப்பித்து ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய அந்த குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version