தம்பிக்காக போலீசாரின் இரு கால்களை பிடித்துகொண்டு கதறி அழுத சகோதரிகள்?..தரதரவென இழுத்து சென்றதால் பரபரப்பு!..

0
202
The sisters who held the two legs of the police for their brother and cried?

தம்பிக்காக போலீசாரின் இரு கால்களை பிடித்துகொண்டு கதறி அழுத சகோதரிகள்?..தரதரவென இழுத்து சென்றதால் பரபரப்பு!..

சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் கஞ்சா விற்றதாக பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சதீஸ்குமார் என்பவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.மேலும் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தப்போது அவர் கஞ்சாவை ஒட்டு மொத்தமாக வாங்கி வந்து அதை பல்வேறு பகுதிகளுக்கு திருட்டு தனமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சேலம் கருப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் சதிஸ்குமாரிடம் பல விசாரணைகளை மேற்கொண்டனர்.அவ்விசாரனையில் கஞ்சா மொத்த வியாபாரிகள் குறித்து போலீசார்கள் விசாரித்து வந்திருந்தனர்.

இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்து வந்த கனகராஜ் என்பவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவரை சிகிச்சை பெற்று வந்த அவரை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது சகோதரனை காவல் துறையினர் வலுகட்டாயமாக அடித்து தரதரவென இழுத்துச் சென்றார்கள் என கூறி கனகராஜின் சகோதரிகள் உமா மற்றும் சுகன்யா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று குற்றம் சாட்டினர்.

அங்கு காவல்துறையிடமிருந்து தனது சகோதரனை விடுவித்து தருமாறு முறையிட்டு வந்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து அங்குள்ள ஒரு போலீஸ் அதிகாரியின் கால்களை பிடித்து கதறி அழுதனர். சில மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பிறகு காவல் அதிகாரி தங்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து செல்வதாக உறுதியளித்தார்.தன் சகோதரனை விடுவிக்ககோரி இரு சகோதரிகளும் காவல் துறையினர் இரு கால்களையும் பிடித்து கதறும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இதை பார்பதற்கே பதபதைக்கும் வகையில் உள்ளன.