கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது!
அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகிய தாழ்வு பகுதி, திடீரென்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் எல்லாம் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததன் காரணமாக பல மாநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை முதல் அதிக மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த தாழ்வு நிலை சற்று திசை மாறியதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த அதிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெற்றது. அதிக கனமழை எச்சரிக்கையை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக சென்னையில் திரும்பப் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்த மழை பாதிப்பு ஆந்திராவை நோக்கி சென்றது. நல்லவேளையாக சென்னை தப்பிவிட்டது.
ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே மழை அதிகளவு தான் பெய்தது. அதுலும் 7 ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் சென்னையில் பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மக்கள் இயல்புநிலைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் திரும்பவும் மழை என்றால், நினைத்துப் பாருங்கள் நமது பொருளாதாரத்தையும், நமது வாழ்வியல் நடைமுறையையும் மேலும் சிரமம் செய்து விடும்.
நேற்று முந்தினம் ஆந்திராவில் பெய்த அதிக கனமழை சென்னையில் பெய்து இருந்தால், நிலைமை ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு கட்டுக்கடங்காமல் போய் இருக்கும். இதை தொடர்ந்து ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான ஆடு, மாடுகளின் மக்களின் கண் முன்பே நீரில் அடித்துச் செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. எல்லாரும் என்ன செய்வதென்று தெரியாமல் தான் நின்றுக்கொண்டு இருந்தனர். அவ்வளவு வெள்ளம் அனைத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. கல்யாணி அணை நிரம்பியதன் காரணமாக இரண்டு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் சுவர்ணமுகி நதியில் திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்கள், இரு சக்கர வாகனங்கள், கால்நடைகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதே போல் அனந்தபூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சென்ற காரில் 4 பேர் சென்றுள்ளனர். அதன்பிறகு அவர்கள் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கினர். எனவே அவர்களை மீட்க திரும்பவும் 6 பேர் சென்றுள்ளனர்.
அதன்பிறகு அந்த பத்து நபர்களையும் காணவில்லை. தொடர்ந்து ஹெலிகாப்டர் உதவியைக் கொண்டு மீட்டனர். அதே போல் திருமலையிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாம் வரிசை கட்டி நிற்போம் அல்லவா? அந்த கம்பிகளில் நாம் நிற்கும் உயரத்தில் மார்பளவு தண்ணீர் நிற்கிறது. அப்படி என்றால் எந்த அளவு வெள்ளம் நிற்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். இதுவரை அங்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழையின் காரணமாக ஆந்திராவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடப்பா மாவட்டத்தில் ராஜம்பேட்டையில் சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் 3 அரசு பேருந்துகள் முழுவதும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பதி நெல்லூரில் மேலும் 5 பேர் என இதுவரை மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் பரிதாபமாக இறந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டோரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெள்ள நிவாரண பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காணொளி மூலம் உரையாடியதோடு, அதன்பின்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் பேசிய போது, ஆந்திராவில் உள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அவர் விளக்கிக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த பிரதமர் அப்போது அளவிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
https://twitter.com/i/status/1461642316662280198