ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் நிகழ்ந்த வியப்பான சம்பவம். அங்கு வசித்து வரும் அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தை நேரில் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
பிமல் குமார் என்பவர் புவனேஸ்வர் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது அந்த வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் பாம்பு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்.
அதன்பிறகு பாம்புகள் ஆர்வலர்களுக்கு இத்தகவலை தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த அவர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி மிகவும் லாவகமாக அந்தப் பாம்பினை இருசக்கர வாகனத்தின் இன்ஜின் பகுதிக்குள் இருந்து மீட்டனர்.
இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்த அந்த பாம்பு மீட்கப்பட்ட பிறகு தான் தெரிந்தது அது 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு என்பது. இதை கண்ட அப்பகுதி மக்கள் வியந்தனர். அந்தப் பாம்பினை மீட்க்கும் வீடியோ வலைதளங்களில் பார்வையாளர்களால் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.