Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

#image_title

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

தந்தையின் பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால் அவர் செய்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு மனைவியும் சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். பட்டப் படிப்பை முடித்துள்ள சுபாஷ்  திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

தண்டபாணியின் மகன் சுபாஷூம் அவருடன் கம்பெனியில் வேலை செய்த ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுஷா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தண்டபாணி அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது மகனிடம் அந்தப் பெண்ணிடம் உள்ள காதலை கைவிடும் படி பலமுறை எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆனால் தந்தையின் பேச்சை கேளாத சுபாஷ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் அனுஷாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையே காதல் திருமணம் செய்த சுபாஷ் தனது மனைவியுடன்  சொந்த ஊரான அருணபதி கிராமத்திற்கு  பாட்டியும், தண்டபாணியின் தாயுமான கண்ணம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது மகன் தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்த தகவல் அறிந்த தண்டபாணி மிகுந்த கோபத்தில் அங்கே சென்று அரிவாளால் மகன், மருமகள் மற்றும் தாய் கண்ணம்மா ஆகிய மூவரையும் சரமாரியாக ஆத்திரம் தீர வெட்டியுள்ளார். மூவரும் அலறியபடி இரத்த வெள்ளத்தில் சரியவே தண்டபாணி அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

இந்த சம்பவத்தில் சுபாஷ் மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரும் உயிரிழக்கவே அனுஷா உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சுபாஷ் மற்றும் கண்ணம்மா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து தப்பியோடிய தண்டபாணியை தேடி வருகின்றனர்.

Exit mobile version