Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாரா காடுவெட்டி குருவின் மகன்…! உதயநிதி ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணி என்ன…?

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கணவன் சந்தித்து பேசி இருக்கின்றார்.

சட்டசபைத் தேர்தல் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் வரவிருக்கும் இந்த நிலையில் அதிமுக திமுக போன்ற முக்கிய கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி இருக்கிறார்கள் அதில் வேறு கட்சியினை சார்ந்த ஏராளமானோர் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் மாறி மாறி இணைந்து வருகின்றார்கள்.

அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கனலரசன் சந்தித்து இருக்கின்றார் இந்த சந்திப்பின் மூலம் கனலரசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகின்றது கனலரசன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளையும் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மிகமுக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குரு மறைந்த பின்பு அவருடைய குடும்பத்தார் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக மாறியிருக்கிறார்கள் தன்னுடைய தகப்பனார் பாட்டாளி மக்கள் கட்சி க்காக உயிருள்ளவரை வைத்ததாகவும் ஆனால் அவரை ராமதாஸ் அவர்களும் அன்புமணி அவர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றனர் இதனையடுத்து காடுவெட்டி குருவின் மகன் தனியாக கட்சி ஆரம்பிக்கப் போவதாக ஒரு செய்தி வெளியானது ஆனால் இப்போது அவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

Exit mobile version