Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாயிடம் கூட இறக்கம் காட்டாத மகன் செய்த காரியம்

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

the-son-who-did-not-show-mercy-to-his-mother-what-a-patriot

தாயிடம் கூட இறக்கம் காட்டாத மகன் செய்த காரியம்

ஓவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் இந்த கொரோனா காலத்தில் தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றலாம் எனவும், எப்படி பணம் பார்க்கலாம் எனவும் பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஒரு வித்தியாசமான மகன் தாய்  என்றும் பாராமல் அரசு விதித்த கட்டளையை பின்பற்றியுள்ளர்.

மராட்டிய மாநிலத்தில் அகமத் நகர் என்ற மாவட்டத்தில் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் ஷேக்(36) வயதான இவர் பதார்டி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தற்போது மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை செயல்படுத்த உள்ள பறக்கும் படையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதையடுத்து அவர் சோதனை நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அன்று அவரது வீட்டருகே அவரின் தாயார், தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று கொண்டு இருந்தார்.

அதை கவனித்த ரஷீத் ஷேக் சிறிதும் தாமதிக்காமல் தாயிடம் இருந்து காய்கறிகளை பறிமுதல் செய்ததோடு மட்டும் இல்லாமல் மாநகராட்சி வண்டியில் அள்ளி போட்டுக்கொண்டார்.இந்த வீடியோ காட்சி இணையங்களில் மிகவும் பரவலாக பார்க்கப்பட்டது.

இது குறித்து அவர் கூறும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது.வீதி வீதியாக சென்று விற்க தடை இல்லை. ஆனால் ஒரே இடத்தில் நின்றோ, கூடாரம் அமைத்து விற்கவோ தடை விதித்துள்ளது.

இதைப்பற்றி முன்னமே என் தாயிடம் கூறியும், அவர் விதிமுறைகளை மீறி ஒரே இடத்தில் விற்றதால் அந்த நடவடிக்கையை மேற்கொண்டேன் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பெற்ற தாய் ஆனாலும் விதிமுறைகளை மீறியதற்காக தடுப்பு விதிமுறையை அமல்படுத்திய ரஷீத் ஷேக்கை நகராட்சி கமிஷனர் கோலேகர்  மனதார பாராட்டி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ரஷீத் ஷேக் திகழ்கிறார் என்று குறிப்பிட்டார்.

Exit mobile version