Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாயுடன் தகாத உறவு!! தட்டி கேட்ட மகனுக்கு கத்தி குத்து!!

#image_title

தாயுடன் தகாத உறவு!! தட்டி கேட்ட மகனுக்கு கத்தி குத்து!!

புளியந்தோப்பை செல்வர் தனலட்சுமி இவரது கணவர் இளஞ்செழியன் ராஜா, இவர்கள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தினமும் குடித்துவிட்டு கணவர் வந்து மனைவியை துன்புறுத்தியதால் கடந்த ஆறு வருடத்திற்கு முன்பாக கணவனை பிரிந்து வேளசசேரியில் தனது மகன்களுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் தூய்மை பணிகளை செய்து வந்திருக்கிறார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அவருடன் தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது.
தாயின் இந்த செயல் பிடிக்காததால் அவருடைய மகன் 17 வயது சிறுவன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.

மேலும் பிரிந்த தனது தந்தையுடன் பேசி தாயை சேர்த்து வைத்த இருவரும் விருகம்பாக்கத்தில் ஒன்றாக இணைந்து குடும்பம் நடத்தியுள்ளனர். ஆனால் அதன் பின்பும் கார்த்திக், தந்தை இல்லாத நேரத்தில் தாயயை சந்திக்க வந்ததால் ஆத்திரம் அடைந்த மகன் கடும் சண்டையிட்டு இருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், 17 வயது சிறுவனை கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தந்தை இளஞ்செழியன் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கத்திக்குத்து காயம் பட்டு மருத்துவமனையில் உள்ள 17 வயது சிறுவன் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

Exit mobile version