Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொங்கிய தொப்பையை கரைத்தும் தள்ளும் சூப்!! ஒரு கப் குடிங்க கொழுப்பு கரைந்துவிடும்!!

வயிற்றில் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க இந்த ரெசிபி செய்து சாப்பிடுங்கள்.நிச்சயம் ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கொள்ளு – அரை கப்
2)சின்ன வெங்காயம் – 10
3)பூண்டு – நான்கு பல்
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)உப்பு – சிறிதளவு
6)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
7)வர மிளகாய் – இரண்டு
8)தண்ணீர் – தேவையான அளவு
9)தக்காளி – ஒன்று

செய்முறை விளக்கம்:-

1.முதலில் அரை கப் கொள்ளு பருப்பை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து பத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் நான்கு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.அதேபோல் ஒரு கனிந்த தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது ஒரு குக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒன்றை கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

4.அதன் பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம்,நறுக்கிய பூண்டு பற்கள்,நறுக்கிய தக்காளி துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

5.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகம்,இரண்டு வர மிளகாய்,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.விருப்பப்பட்டால் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

6.பிறகு குக்கரை அடுப்பில் வைத்து மூன்று முதல் நான்கு விசில் வரும் வரை கொள்ளு சூப்பை வேக வைக்க வேண்டும்.

7.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு விசில் நின்ற பிறகு கொள்ளு சூப்பை கிண்ணத்திற்கு மாற்றி மாலை நேரத்தில் பருக வேண்டும்.கொள்ளு சூப் செய்து பருகி வந்தால் தொப்பை கொழுப்பு உருகிவிடும்.

தொப்பை கொழுப்பை கரைக்கும் மற்றோரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)ஆளிவிதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டடி ஆளிவிதையை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

2.இந்த ஆளிவிதை பானத்தை லேசாக ஆறவைத்து பருகி வந்தால் தொப்பை கொழுப்பு வேகமாக குறைந்துவிடும்.கொள்ளு சூப் மற்றும் ஆளிவிதை பானம் தொப்பை கொழுப்பை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

Exit mobile version