Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்?

The spread of Corona continues to increase! Curfew again?

The spread of Corona continues to increase! Curfew again?

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டது. மேலும் ஊரடங்கு அமல்படுத்திய பிறகு கொரோனா பரவல் ஓரளவு குறைய தொடங்கியது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள்  அவரவர்களின்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது.

அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் மட்டும்  மாநில முழுவதும் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மந்திரி வீணா ஜார்ஜ் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் உஷாரநிலை பிறப்பிக்கப்பட்டது. மேலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இவ்வாறே கொரோனா தொற்று அதிகரித்து வந்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version