Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

The state is approaching danger level due to rain!! People frozen in fear holding their lives in their hands!!

The state is approaching danger level due to rain!! People frozen in fear holding their lives in their hands!!

மழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

அசாமில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கிய கனமழை வெளுத்து வாங்கிவந்தது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்த கனமழையால் பல்வேறு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. மேலும் பல இடங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையடுத்து வியாழன் வரை கனமழைக்கும், அதிதீவிர கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே அதிக வெள்ள பாதிப்புகள் இருக்கும் நிலையில் இன்னும் மூன்று நாள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் இல்லாமல் தவித்து வரும் நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை மக்களை  கவலைடைய வைத்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 444 கிராமங்கள் மழையால் மூழ்கியது. இதனையடுத்து இன்று நிலவரப்படி  523 கிராமங்களில் தண்ணீரில் மூழ்கியது.

இது மட்டுமின்றி பல இடங்களில் மண்ணரிப்பு,நிலச்சரிவு, சாலைகள் மற்றும் வீடுகள் அதிகம் சேதமடைந்துள்ளது. மேலும் 24 நிவாரண பொருட்கள் வழங்கும் மையம் நான்கு மாவட்டத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற ஆய்வில் பிரம்மபுத்திரா மற்றும் துணை நதிகள் இன்னும் அபாய கட்டத்தை தொடவில்லை என்று கூறியுள்ளார்கள்.

Exit mobile version