பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு!

0
104
The status of women prevails! Union Minister's dramatic speech!

பெண்களின் நிலை மேலோங்கி காணப்படுகிறது! மத்திய அமைச்சரின் அதிரடியான பேச்சு!

பெண்களின் மேம்பாட்டு நிலை தொடர்பான ஐ.நா.ஆணையத்தின் 65 ஆவது அமர்வு நடைபெற்றது.இந்த அமர்வில் மத்திய பெண்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்துக்கொண்டார்.அப்போது அவர் கூறியது,இந்த கொரோனா தொற்றானது முற்றிலும் அகலும் வேலையில்,அந்த காலக்கட்டமானது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமமான சமுதாயத்தை  உருவாக்கும் என்ற என்னத்தில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக கூறினார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரத்தை ஏற்படுத்தி தற்போதே அதை உறுதி செய்துள்ளது.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு,சுய வேலைவாய்ப்பு,சுகாதாரம்,ஊட்டச்சத்து,பாதுகாப்பு மற்றும் கல்விக்கான அதிக அளவு வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக முதன்மையான திட்டங்களை இந்தியாவில் நாங்கள் செயல் படுத்திவருகிறோம்.இந்தியாவில் தொழில் முனைவோர் மேம்மாட்டு திட்டங்களில் பெண்களுக்கு அதிக அளவு வாய்ப்புகளை கொடுத்து வருவதாக அவர் கூறினார்.இவர் கூறியதில் 40% சதவீதம் பெண்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்.

அதிகபடியானோர் வேலைவாய்புகள் இல்லாமல் இருக்கின்றனர்.அதுமட்டுமின்றி சில குறிப்பிட்ட கிராமங்களில் பெண்களை படிக்கவே அனுப்புவதில்லை.ஆண்களுக்கு நிகர் பெண்கள் அனைத்து  துறைகளிலும் இருந்தாலும் அது குறைந்த அளவே காணப்படுகிறது.பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசினார்.முன்பை விட இந்த காலக்கட்டத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட மருத்துவம் படிக்கும் ஒரு பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்தனர்.அதனைத்தொடர்ந்து பொறியியல் படிக்கும் மாணவியையும் பட்ட பகலிலேயே கூட்டு பலாத்காரம் செய்தனர்.இவர் கூறிய அனைத்தும் நடைமுறை வாழ்கையில் செயல்படுத்திக் கொடுத்தால் பெண்கள் இன்னும் பலத்துறைகளில் சாதிப்பார்கள்.