தெஹ்ரீக் இ தாலிபான் டி டி பி என்ற பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் முக்கிய நோக்கம் பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்தை தூக்கிவிட்டு அங்கும் தாலிபான் ஆட்சியை கொண்டு வந்து இரு நாடுகளையும் ஒன்றிணைப்பது. அவர்கள் ஆப்கானில் தங்கி அவ்வபோது பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் இவர்களுக்கென உள்ள தளவாட பகுதிகளில் திடீர் தாக்குதலை ஏற்படுத்தினர். அவர்களின் தளவாட பகுதி ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திக மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் உள்ளது. பாகிஸ்தான் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தற்போது பெரிய இரு நாடு தாக்குதலாக மாறி வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் ராணுவ படைகள் பாகிஸ்தான் எல்லையில் மளமளவென குவித்து வருகிறது. அந்த வான்வழி தாக்குதலில் குழந்தைகள் அப்பாவி பெண்கள் என பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த மிருகத்தனமான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதனை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் என்றுமே ஏற்றுக் கொண்டு இருக்காது. இதற்கான பதிலடியை கொடுத்தே தீரும் என்று தாலிபான் பாகிஸ்தானை சுற்றி வளைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.