மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது!

0
412
The strange announcement issued by the central government! They no longer have income tax!

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது!

இம்மாதம் முதல் நாளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில்  தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு உருவாக்கியுள்ளது. இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் அந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது.

அந்த வகையில் வருமான வரி வரம்பை ஏழு லட்சமாக அரசு உயர்த்தி உள்ளது. அதனால் ஆண்டு வருமானம் ஏழு லட்சம் ரூபாயாக இருப்பவர்கள் இனி வரிசெலுத்த வேண்டியதில்லை. அரசு வழங்கிய சலுகையால் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

வருமான வரிச்சட்டத்தின் 87A பிரிவின் கீழ் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்த்தக மக்களுக்கு மிக பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது என கூறியுள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் உரை முடிந்த பிறகு பட்ஜெட் ஆவணம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.