Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால்  பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-சத்திரம் பகுதியில் வசித்து வரும் ரவி (46)-சாந்தி (40) ஆகியோர் தம்பதியர்களுக்கு பவத்ரா (23) என்ற மகள் உள்ளார் .கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பவித்ரா என்பவர், திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவரை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் .ஆனால் ,திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமானது.

இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் .இருப்பினும் பிரிந்து வாழ்ந்ததில் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா ஜூலை 15-ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்..

இதனையடுத்து பவித்ராவின் இறுதி சடங்குக்கு கூட கணவர் அரவிந்தனை அனுமதிக்கப்படவில்லை. இறுதியாக மனைவியின் முகத்தை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை என்ற சோகத்தில் அரவிந்தனும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, கடந்த 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே தனது மகன் உயிரிழந்ததால் ரவி-சாந்தி தம்பதியினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் சாந்தி சென்னை கொரட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரவி, நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பட்டாபிராம் காவல்துறையினர் விசாரித்தபொழுது மகள் தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது .மகள் இறந்ததற்காக கணவன் மற்றும் அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version