கல்வி தொலைக்காட்சி வழியே நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கின்றது.
சென்ற மார்ச் மாதம் கொரோனா பாதிப்பினால் விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை இதன் காரணமாக மாணவர்களின் நலனை யோசித்து கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை நடத்தி வருகிறார்கள் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதன்படி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அரசாணை ஒன்றை வெளியிட்டது.
ஆனாலும் அதற்கு எதிர்ப்புகள் இருந்த காரணத்தால் அந்த அரசு ஆணை நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது இந்நிலையில் இப்படி தொடர்ந்து கொண்டே போனால் 10 11 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வது கடினம் என்ற நிலையில் 10 11 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்தப்படும் இதில் இருந்து அதிக அளவில் கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கின்றது.