சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீது இன்று விசாரணை
சிபிஐ அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யவுள்ளது.
சிபிஐ அமலாக்கத்துறை வழக்குகளில் கைதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி காங்கிரஸ் தலைமையிலான 14 எதிர்க் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, பிஆர்எஸ், என்சிபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளில் கைது, நீதிமன்ற காவலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதால் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவித்து இந்த எதிர்க்கட்சிகள் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளன என கடந்த 24-ஆம் தேதி முறையிட்டார்.
முறையிட்ட ஏற்ற உச்ச நீதிமன்றம் ரிட் மனுவை ஏப்ரல் 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.