Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட தமிழக அரசு! நீட் தேர்வு தொடர்பான மனுவை ஓரம் கட்டிய உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வு கட்டாயம் ஆகிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனதில் சில திருத்தங்கள் செய்து மறுபடியும் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது.

அந்த மனதில் மருத்துவ படிப்பில் வேற நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால் கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பான விரிவான புள்ளி விவரங்களை தமிழக அரசு குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த மனுவை சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதான்சு தூவியா அமர்வு விசாரணை செய்தது. அப்போதும் மனதில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் மரிருத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை விசாரணைக்கு உகந்தது என்று உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது அப்போது நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஜனாதிபதியிடம் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு வாதம் செய்தது இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Exit mobile version