துணைவேந்தரை  நியமிப்பதில் தூங்குகிறது தமிழக அரசு!! அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

0
82
Tamil Nadu government is having a problem with the governor in appointing the vice-chancellor of the university

dmk: பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநருடன் பிரச்சனை செய்து வருகிறது தமிழக அரசு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைக்க ஆணையம் பிறப்பித்து இருந்தது.  இந்த ஆணையம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வருகிறார். தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருக்கிறது.

இது குறித்து பாமக அன்புமணி அவர்கள் அறிக்கை ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதில், கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலம் முடிந்து. மேலும், அதே வருட நவம்பர் மாதத்தில்  கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி  முடிந்து. எனவே பல்கலைக்கழகங்களுக்கு  துணைவேந்தரை நியமிக்க திமுக அரசு தேடுதல் குழுவை அமைக்க ஆணையம் பிறப்பித்து.

இரண்டு வருடங்கள் ஆகியும் துணைவேந்தர்  நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள  6 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் அவற்றின் செயல்பாடுகள் முடங்கி இருக்கிறது. மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லாததால் அவர்கள் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

திமுக அரசு கல்வி பற்றிய பொறுப்பில்லாத சூழல் காரணமாக பல்கலைக்கழகங்களில் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.