Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசு சார்பில் கட்டித் தரப்படும் புது வீடு! தமிழக அரசு ரூ. 3,50,000 வழங்குகிறதா?

The Tamil Nadu Government will provide Rs. 3,50,000 grant

The Tamil Nadu Government will provide Rs. 3,50,000 grant

TAMIL NADU: கலைஞர் கனவு இல்லம் திட்டம் கீழ் வீடு கட்டுபவருக்கு தமிழக அரசு ரூ. 3,50,000 மானியம் வழங்குகிறது.

மனிதர்களின் வாழ்வில் வீடு என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாக இருந்து வருகிறது. மக்களில் பல பேருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கிறது. வீடு கட்டுவதற்காக சில பேர் பல வருடங்களாக பணம் சேகரித்து வீடு கட்டுவர், சில பேர் கடன் வாங்கியாவது கட்ட வேண்டும் என்று எண்ணி வீடு கட்டுவர். இப்படி பல பேருக்கு வீடு என்பது ஒரு தேவையாக மட்டுமில்லாமல் அவர்களின் உணர்வுகளில் கலந்துள்ளது.

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களால் இந்த கனவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதனை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு புதிதாக ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதுதான் “கலைஞர் கனவு இல்லம் திட்டம்”. தமிழக அரசு பொது மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் கலைஞர் கனவு இல்லம் திட்டம். இந்த திட்டம் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்காகக் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ. 3,50,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 2024-2025 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ரூ. 800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம்?
இந்த திட்டத்தில் பயன் பெற ஒரு சில நிபந்தனைகள் உள்ளன. அவை பின்வருமாறு:
1)கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற ஒருவர் வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
2)அது மட்டும் இல்லாமல் அவருக்குச் சொந்த இடத்தில் ஒரு குடிசை வீடு இருக்க வேண்டும்.
3)விண்ணப்பிக்கும் நபருக்கு ஏற்கனவே கான்கிரீட் வீடு இருந்தால் இந்த திட்டத்தில் அவர் பயன் பெற மாட்டார்.

மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மக்களுக்கு மொத்த தொகையும் வழங்கப்படாது. அதற்கு பதிலாக கட்டுமானத்தின் அளவைப் பொறுத்து 4 தவணைகளாகப் பணம் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version