Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் விலக்கு மசோதா! இன்று காலை கூடுகிறது தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்!

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்து சென்ற செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், சமீபத்தில் இந்த நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியிருந்தார் இது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பியனுப்பிய ஆளுநருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.மேலும் மீண்டும் இந்த நீட் எதிர்ப்பு சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்படும் என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில், நீட் எதிர்ப்பு சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் இன்று தொடங்குகிறது.

இன்று சபாநாயகர் கடந்த 5ஆம் தேதி அறிவித்திருந்தார். அதோடு நீட் விலக்கு மசோதாவை மறுபடியும் நிறைவேற்றும் விதத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சபாநாயகர் கூறியிருந்தார்.

ஆகவே இன்று காலை 10மணியளவில் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது, நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை ஆளுனர் திருப்பியனுப்பியிருக்கும் இந்த சூழ்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி. மதிமுக, உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நீட் விலக்கு குறித்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

நீட் விலக்கு மசோதாவை மறுபடியும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Exit mobile version