Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ‘டாக்ஸி’ செயலி!

#image_title

இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ‘டாக்ஸி’ செயலி!

தனியார் டாக்ஸி செயலிகளான உபர், ரேபிடோ, ஓலோ போன்றவை முறையான வரம்பு இல்லாமல் இஷ்டத்திற்கு தொகையை கூட்டுவது, குறைப்பது என்ற வண்ணம் உள்ளன.

அது மட்டுமல்லாது அதிக போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்லுவும், பண்டிகை காலங்களில் டாக்ஸியை பயன்படுத்தும் பொழுதும் அதிக கட்டணங்களை வசூலிப்பதாக பெரும்பாலான பயணர்கள் அவ்வபோது குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கு தனியார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற டாக்ஸி செயலிகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து முறையான கட்டணத்தை நிர்ணயிப்பதே தீர்வாகும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

தற்போது, அதற்கு தீர்வு காணும் நிலையில் (டாடோ) என்ற தனியார் டாக்ஸி செயலியை தனியாரால் தயாரிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என கூறப்படுகிறது.

எனவே இனியாவது அரசின் கட்டுப்பாட்டில் பயணர்களிடம் முறையான தொகையை வசூலிக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version