Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரதம் இருந்ததால் பள்ளி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்!

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஜன்மாஷ்டமி பண்டிகையில் விரதம் இருந்ததற்காக 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆசிரியர் சரண் மார்க்கம், மாணவர்களை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்து கடவுளுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் கூறியுள்ளார். அதனால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மார்கம் கிரோலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூந்தாப்பராவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் பட்டிருந்தார்.அவர் மீதான புகாரின் மீது முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கொண்டகான் கலெக்டர் புஷ்பேந்திர குமார் மீனா கூறினார்.

 

கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் கிராமவாசிகள் செவ்வாயன்று பள்ளியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவர்களை ஜன்மாஷ்டமியில் விரதம் இருந்ததால் தாக்கியதாகவும், கிருஷ்ண பகவான் மீது ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.

 

கிராம மக்கள் தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர் என , மாவட்ட ஆட்சியர் மீனா கூறியுள்ளார்.

 

அதில் திங்கள் கிழமை ஜன்மாஷ்டமி கொண்டாடப்பட்டது, அடுத்த நாள் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அவர்களில் எத்தனை பேர் விரதம் இருந்தார்கள் மற்றும் திருவிழாவின் போது சடங்குகள் செய்தீர்கள் என மாணவர்களிடம் அவர் கேட்டுள்ளார்.

 

மாணவர்கள் யார் விரதம் இருந்தார்களோ அவர்கள் கைகளை உயர்த்த அவர்களை மட்டும் தனியாக அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக புகார் மற்றும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

அதைத் தொடர்ந்து, விசாரணை நடத்த ஒரு அரசு அதிகாரி அனுப்பப்பட்டு, அறிக்கையின் அடிப்படையில், ஆசிரியர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவும் கூறினார்.

 

இது தொடர்பான அறிக்கை காவல்துறையினருக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கூறினார்.

 

இடைநீக்க உத்தரவில், ‘மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் சமூகத்தில் வெறுப்பை பரப்புவது கடுமையான தவறான நடத்தை என்ற பிரிவின் கீழ் வருகிறது. இந்த பிரிவின் கீழ் இந்த குற்றம் சட்டீஸ்கர் சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகள் 1965 க்கு எதிரானது.

 

அதேபோல அந்த உள்ளூர்வாசிகள் மார்க்கம் ஆசிரியரை தாக்கியதாக மற்றொரு குற்றமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை மற்றும் ஆசிரியர் மீது உள்ளூர் கிராம மக்கள் அளித்த புகாரை நாங்கள் பெற்றுள்ளோம்.

தவிர, பழங்குடி சமூகங்களின் சங்கமான சர்வ ஆதிவாசி சமாஜிடமிருந்து எதிர் புகார் ஆசிரியரை தாக்கியதாக கூறி எதிர்ப்பு புகாரும் பெறப்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

 

 

 

 

 

 

Exit mobile version