Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா?

The teacher expelled the student from the school! Did Sammy fast?

The teacher expelled the student from the school! Did Sammy fast?

பள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா?

நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 300க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல விரதம் இருந்துள்ளார்.அந்த விரதத்திற்காக அவர் கழுத்தில் மாலை அணிந்து ,காதில் கம்மல் ,காலில் கொலுசு போன்றவைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.

அதனை கண்ட ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் அணிந்திருக்கும் மாலை மற்றும் கம்மல் ,கொலுசு ஆகியவற்றை கழற்றி வைத்த பிறகு தான் பள்ளிக்குள்  அனுமதிப்பேன் என கூறியுள்ளார்.ஆனால் அந்த மாணவன் இவை அனைத்தும் வேண்டுதலுக்காக அணிந்துள்ளேன் ஆகையால் இதனை என்னால் கழட்டி வைக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

அதனால் வகுப்பறையில் இருந்த மாணவனை ஆசிரியர் வகுப்பில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளார்.அதனால் அந்த  மாணவன் வகுப்பில் இருந்து சென்று அவருடைய பெற்றோரிடம் இதனை பற்றி கூறியுள்ளார்.அதனால் பெற்றோர் பள்ளிக்கு நேரில் சென்று சமந்தப்பட்ட ஆசிரியம் தாங்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கு நடக்கும் வாக்குவாததை வீடோயோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகின்றது.இந்த சம்பவத்திற்கு ஒரு பிரிவினர் ஆதரவும் ,மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version