பத்து வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை! கோவத்தால் ஏற்பட்ட விபரீதம்!
டெல்லி நகர் நிகாம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. அந்தவகையில் நிகாம் பகுதியில் பிராத்தமிக் வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகின்றது.அங்கு சமூகஅறிவியல் பாடம் ஆசிரியையாக கீதா தேஷ்வால் பணியாற்றி வருகின்றார்.
அவர் நேற்று காலை 11 மணியளவில் ஐந்தாம் வகுப்பிற்கு பாடம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது அந்த வகுப்பில் இருந்த வந்தனா என்ற மாணவி பாடத்தை சரியாக கவனிக்கவில்லை அதனால் அவர் மீது கோபம் அடைந்த ஆசிரியை கீதா வந்தனாவை கடுமையாக திட்டியும் ,அடித்தும் தாக்குதல் நடத்தினார்.
அதன்பிறகும் ஆத்திரம் தாங்காமல் ஆசிரியை கீதா வைத்திருந்த கத்திரிக்கோலை கொண்டு மாணவி வந்தனாவின் தலை முடியை வெட்டியுள்ளார்.கத்தரிக்கோலை வைத்து உடலிலும் காயத்தை ஏற்படுத்தினார். அதில் மாணவி வந்தன உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.
மேலும் அவர் அந்த மாணவியை அவர் படிக்கும் 5 ஆம் வகுப்பறை முதல் மாடி ஜன்னலில் இருந்து கீழே வீசியுள்ளார்.மாணவி விழுந்ததை கண்ட சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் அவர்கள் ஆசிரியை கீதாவை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.அவர் மீது 307 ஆவது பிரிவின் கீழ் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காயம் அடைந்த மாணவியின் சிகிச்சை தொகையை டெல்லி கார்ப்பரேஷன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.இந்த கொடூர செயல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.