actress vanitha: ”மிஸ்டர் அண்ட் மிஸஸ்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் “மிஸ்டர் அண்ட் மிஸஸ்” இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை வனிதா பேசிய வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை வனிதா தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் வனிதா.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மாணிக்கம்,தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார் இப் படங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றிப் படங்களாக அமையவில்லை. நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கையில் பல சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நடிகை வனிதா முதன் முதலாக ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இத் தம்பதிகளுக்கு ஸ்ரீஹரி, ஜோவிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் விவாகரத்து செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டாவதாக ராஜன் ஆனந்த் திருமணம் செய்து கொண்டார் அவரையும் விவாகரத்து செய்தார் நடிகை வனிதா. இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் மூன்றாவது திருமணமாக பீட்டர் பாலை திருமணம் செய்தது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் “மிஸ்டர் அண்ட் மிஸஸ்” டீசர் வெளியாகியுள்ளது அப் படத்தில் வரும் காட்சியாக 40 வயது ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும் என்று வனிதா அடம்பிடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.