Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்! 

#image_title

அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்! 

வீட்டில் உள்ள சிலிண்டரை  அணைக்காமல் வெளியே சென்ற வாலிபர் அது வெடித்ததால் காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 25. இவர் கடந்த  17-ஆம் தேதி இவரது தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு குளிக்க வீட்டில் உள்ள கேஸ் அடுப்பில்வெந்நீர் போட்டு உள்ளார்.

அடுப்பில் வெந்நீர் வைத்ததை மறந்து விட்டு அவரது தாயை ஆஸ்பத்திரிக்கு அவசரமாக அழைத்து சென்று உள்ளார்.  அப்போது அடுப்பில் வெந்நீர்  அணைக்காமல் சென்று விட்டதால் இதில்  தண்ணீர் கொதித்து சிந்தியதால் அடுப்பு அணைந்துள்ளது.

ஆனால் ஜாஸ் சிலிண்டரில்  உள்ள கியாஸ் முழுவதும் அடுப்பின் வழியே வெளியேறி அறை முழுவதும் பரவி உள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு இரவில் முத்துக்குமார் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

வீடு இருட்டாக இருந்ததால் வீட்டில் உள்ள மின்விளக்கு சுவிட்சை போட்டு உள்ளார்.  சுவிட்சில் இருந்து அப்போது வந்த தீப்பொறியால் வீட்டில் பரவியிருந்த  கியாஸ் தீப்பற்றியது. இதனால்  சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து கீழே விழுந்து சேதம் அடைந்தது.  

இந்த விபத்தில் முத்துக்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு குறித்து பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

Exit mobile version