நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்!

Photo of author

By Hasini

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்!

பெங்களூர் பகுதியில் வசித்த வட மாநில இளம்பெண் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றார். அதன் பின் குடிபோதையில் இருந்த அந்த இளம்பெண் ஒரு நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் முருகேஷ்பாளையாவில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாவார்.

நேற்று முன்தினம் இரவு அந்த பெண் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசிக்கும் தன் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று இருந்தார். அங்கு நடந்த விருந்தில் இளம்பெண்ணும் பங்கேற்றார். நள்ளிரவு முதல் நண்பர்களுடன் சேர்ந்து இவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அதிகாலை 3 மணி அளவில் வாடகை காரில் தன் வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது அந்த இளம்பெண் குடிபோதையில் இருப்பதையும், காரின் கதவை திறக்க முடியாமல் சிரமப் படுவதையும் கார் டிரைவர் நோட்டம் பார்த்து தெரிந்து கொண்டதன் காரணமாக, அவரது வீட்டின் அருகே அந்த பெண் இறங்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். இதையடுத்து அதை அந்த வண்டியின் ஓட்டுனர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வண்டியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்து சென்று, அந்தப் பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அதன் பின் இளம்பெண்ணின் வீட்டிலேயே விட்டு விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப் படுகிறது. நேற்று காலையில் இதுபற்றி அறிந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்து அதன் காரணமாக, உடனே இதுகுறித்து ஜீவன் பீமா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அந்த பெண் வந்தது வாடகை கார் என்பதால், அந்த வாகனத்தின் பதிவு எண்ணின் மூலமாக அந்த ஓட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அந்த காரின் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் இளம் பெண்ணுக்கும் பவுலிங் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Exit mobile version