பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இன்று முதல் மேலும் மூன்று மணி நேரம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு பல தடைகள் விதிக்கப்பட்டு இருந்தன.
தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகளவு குறைந்துள்ளதன் காரணமாக அந்தத் தடைகள் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன. தற்போது கடந்த சில வாரங்களாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதேசமயம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்று முதல் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மேலும் மூன்று மணி நேரங்கள் கூடுதலாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை 5 மணி முதலே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மூன்று மணிநேர கூடுதல் கால அவகாசம் கொடுத்து உள்ளதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தமிழக அரசின் அறிவிப்பின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மிகுந்த கட்டுபாடுகளை பின்பற்றுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.