tamil nadu: தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்பில் உள்ள 92 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் முதல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் மற்ற 9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்டமாக தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், 27 மாவட்டங்களில் 92 ஆயிரம் பதவிகள் ஊராக ஊராட்சி அமைப்புகளில் நிரப்பப்பட்டது.
அதாவது, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என போன்ற பதவிகளுக்கான தேர்தலாக இது இருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
ஒரு தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அதற்கு 45 நாட்களுக்கு முன்பாக வாக்காளர்கள் பட்டியல் வெளியிட வேண்டும் ஆனால் அது போன்ற எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால் தேர்தல் தற்போது நடத்துவதற்கு சாத்தியக் கூறுகள் குறைவாக இருக்கிறது. இந்த தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில், உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது அவற்றை ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்காக தற்போது பதவி காலம் முடிவு பெற இருக்கும் ஊராட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜனவரி மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் திமுக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.