பள்ளியின் முதல் நாளே பாடப்புத்தகம் வழக்கப்படும்!! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், கிரேயான்ஸ், பள்ளி சீருடைகள், ஸ்கூல் பேக், ஷூ போன்றவையும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே வழங்கப்படும் வகையில், பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க பட உள்ளது.
முதன்மை கல்வி அதிகாரி கட்டுப்பாட்டில், புத்தகங்கள் குடோன்களில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு அனுப்பப் படுகிறது. அதாவது, தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல் நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும்.
ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.