ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் உண்டியலை திருட சென்ற திருடன் உண்டியலை உடைக்க முடியாததால் துர்கை அம்மன் சிலையை திருடி சென்ற அவலம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எல்ஐசி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் உள்ள உண்டியலை உடைப்பதற்கு மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோயிலுக்குள் புகுந்து முயற்சி செய்துள்ளது.உண்டியல் சுவற்றுடன் ஓட்டி இருப்பதால் உடைக்க முடியாத காரணத்தினால் அருகில் இருந்த துர்கை அம்மன் சிலையை உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.பாலமுருகன் திருக்கோயில் உள்ள சுமார் நான்கிற்கும் மேற்பட்ட சிலைகளை சேதப்படுத்தி சென்றது தெரியவந்துள்ளது .ஊத்தங்கரை பகுதியில் கோவிலில் உண்டியலை உடைப்பது வழக்கமாக இருந்த வந்த நிலையில் தற்போது உண்டியல் உடைக்க முடியாத காரணத்தினால் சிலையை திருடிச் சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.