Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண்ணம்மா செய்த காரியம்!! வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்!!

The thing that Kannamma did !! Photo goes viral on website !!

The thing that Kannamma did !! Photo goes viral on website !!

கண்ணம்மா செய்த காரியம்!! வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவி என்றாலே சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும் தான். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் தான். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக் கென ஒரு தனி மவுசு தான். விஜய் தொலைக்காட்சி ஆரம்பித்த சமயத்தில் மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சுவாரசியமான சீரியல்களை ஒளிபரப்பினர்.  அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளை கவரும் வண்ணம் பல சீரியல்கள் ஒளிபரப்பானது.

தற்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சீரியல்களுக்கு தான் அதிக டிஆர்பி உயருகிறது. குறிப்பாக எந்த ஒரு சீரியலில் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறதோ அந்த சமயத்தில் மட்டும்தான் அந்த சீரியலுக்கு  டிஆர்பி உயரும். ஆனால் மக்களை பெருமளவில் கவர்ந்த பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி எப்பொழுதுமே உயரத்தில் தான் இருந்து வருகிறது. பாரதி கண்ணம்மா என்னும் சீரியல் பணக்கார வீட்டு பையன் மற்றும் ஏழை மருமகளை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டது. ஆரம்பத்தில் பெரிதும் சுவாரஸ்யமாக இல்லாத இந்த நாடகம் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையினால் கண்ணம்மா அந்த வீட்டை விட்டு வெளியே சென்று தன் வாழ்க்கையை துவங்குவது போல கதை இருந்தது. அந்த திருப்பத்தில் இருந்து தான் நாடகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இந்த நடிகை  இணையதளத்தில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வருவார்.

குறிப்பாக நேற்று பதிவிட்ட போட்டோவில் அவர் துளிக்கூட மேக்கப் எதுவும் போடாமல் எடுத்த அந்த போட்டோ பகிர்ந்து உள்ளார் .அந்த புகைப்படம் அவரின் ரசிகர்களால் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக நாடகங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் மேக்கப் இல்லாமல் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளிவிட மாட்டார்கள் என்ற ஒரு உண்மை அனைவரும் அறிந்தது தான். ஆனாலும் சில  நடிகைகள் மேக்கப் இல்லாமலும் மிகவும் அழகாக தோற்றமளிப்பது சகஜம். இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி ஹரிப்ரியன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. சீரியலில் இவ்வளவு கருப்பாக தோற்றமளித்தாலும் போட்டோவில் பார்க்கும்போது மிகவும் அழகாக இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அவரது ரசிகர்கள் மேக்கப் போடாமலேயே சீரியலில் நடிக்கலாமே! நல்லாதான் இருக்கீங்க! என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

Exit mobile version