வில்லத்தனமான நடிப்பு, காமெடியன் மற்றும் கேரக்டர் ரோல்கள் எனக் கலக்கும் நடிகர் தான் தம்பி ராமையா. பல படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். தற்சமயம் இவரது மகன் உமாபதி இயக்கத்தில் வெளியாகும் பச்சைக்கிளி படத்தில் திரைக்கதை ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.
தம்பி ராமையா மகன் உமாபதிக்கும், பிரபல முன்னணி நடிகர் அர்ஜுன் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாக்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. கல்யாண வேலைகளுக்கிடையிலும் உமாபதி ராஜக்கிளி என்ற படத்தை இயக்கி வருகிறார். தம்பி ராமையா தன்னுடைய சம்மந்தியான அர்ஜுனனை தன் தாய்,தகப்பன் ஸ்தானத்தில் பார்ப்பதாகவும், தற்பொழுதும் அவரை மரியாதையாக ‘சார்’ என்று அழைத்து வருகிறேன் என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.
ராஜக்கிளி:
ராஜக்கிளி படத்தை உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இயக்கியிருப்பதாக தம்பி ராமையா பேட்டி அளித்துள்ளார். இப்படத்தில் திரைக்கதை ஆசிரியராக தம்பி ராமையா இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் இருக்கும் இயக்குனர்கள் இளைஞர்களை மட்டுமே கதாநாயகராகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் 50 வயது நிரம்பியவரிடம் நிறைய அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன எனவும் கூறினார். ப. பாண்டி போன்ற ஒரு சில படங்களே வயதானவர்கள் மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்றார். பச்சைக்கிளி படம் முற்றிலும் திறம்பட செயல்பட்டத் தொழிலதிபரை எப்படி இந்த சமுதாயம் இறக்கையைப் புடுங்கி நடைபிணம் ஆக்கியது என்பதே கதைக்கரு என்றார்.
அப்பேட்டியிலேயே,
சமுத்திரக்கனிப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார். பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தனது நீண்ட கால நண்பர் என்றும், தன்னுடன் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் சமுத்திரக்கனி உடனிருப்பார் என்றும் நெகிழ்ந்தார்.
தன்னுடைய ரத்த சொந்தங்கள் தன்னை விட்டுச் சென்றாலும், தன்னை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள சமுத்திரக்கனி உள்ளதாகக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தான், தன் குடும்ப உறுப்பினரையே மிரட்டி வருகிறேன் என்றும் சொன்னார். காலை 7 மணிக்கு வரும் காபி 7:10க்கு வந்தாலும் தன்னுடைய தம்பி சமுத்திரக்கனி வீட்டிற்கு சென்று விடுவேன் என்று தன் குடும்பத்தினரை மிரட்டி வருவதாகவும் கூறினார். இதன் மூலம் தனக்கும் சமுத்திரக்கனிக்கும் இடையேயான உறவு குறித்து அவர் பெருமிதம் கொள்வதை வெளிப்படுத்தி உள்ளார்.