குழந்தையை வாயில் கவ்விய புலி? கட்டி புரண்டு சண்டையிட்ட தாயின் பாசப் போராட்டம்!..
மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் போலா பிரசாத்.இவருடைய மனைவி அர்ச்சனா வயது 25.இந்த தம்பதிக்கு 15 மாதமே ஆனா ஒரு ஆண் குழந்தை உள்ளது.இவர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
அதன்படி தனது ஆண் குழந்தையை வீட்டுக்கு வெளியில் அழைத்து சென்றார் குழந்தையின் தாய்.அப்போது திடிரென்று வனப்பகுயில் இருந்த புலி ஒன்று குழந்தை மீது பாய்ந்தது.குழந்தையின் தாய் எவ்வளவோ தடுத்தும் அந்த புலி குழந்தையை வாயில் கவ்விய படி காட்டுக்குள் ஓட முயன்றது.
அந்த புலியை விரட்டிய படியே தாய் சென்றார்.திடிரென்று புலியை கட்டி பிடித்து புரண்டு கீழே விழுந்து சண்டை இட்டார்.பெருத்த ஆத்திரம் அடைந்த புலி குழந்தையை வாயிலிருந்து போட்டு விட்டு தாயை தாக்கியது.அலறி அடித்து கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து கொண்டு ஓடி வந்தனர்.
அனைவரும் கத்தி கூச்சலிட்டதால் புலி வனப்பகுதிக்கு தப்பிச் சென்றது.புலி தாக்கியதால் தாயும் மற்றும் அவரது குழந்தையும் பலத்த படுகாயமடைந்தனர்.பின் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.தன் உயிரையும் பணையம் வைத்து பெற்ற குழந்ததையை புலியுடன் சண்டையிட்டு காப்பாற்றிய அர்ச்சனாவுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துவுள்ளது.