பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அதிரடி கைது!
தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற போட்டியாளர் பல்லவி பிரஷாந்த் என்பவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஹிந்தியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் பிரபலமாகி தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழில் தற்பொழுது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் தெலுங்கு மொழியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது டிசம்பர் 17ம் தேதி முடிவடைந்தது.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர் பல்லவி பிரஷாந்த் பிக்பாஸ் 7 டைட்டிலை வென்றார். மற்றொரு போட்டியாளர் அமர்தீப் என்பவர் இரண்டாம் இடம் பிடித்தார். பிக்பாஸ் ஷோ முடிந்து டைட்டில் வென்று வெளியே வந்த பல்லவி பிரஷாந்த் அவர்கள் ரசிகர்களுடன் சேர்ந்து பேரணியாக சென்றுள்ளார்.
பல்லவி பிரஷாந்த் அவர்கள் பேரணியாக செல்லும் பொழுது அந்த பேரணியில் சிலர் வாகனங்களையும் பேருந்துகளையும் தாக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பான சில வீடியோக்களும் வெளியாகி சர்சையானது.
பல்லவி பிரஷாந்த் அவர்கள் பேரணி சென்ற பொழுது ஏற்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு சில ரசிகர்களை கைது செய்தனர். மேலும் பல்லவி பிரஷாந்த் அவர்கள் தலைமறைவு ஆகிவிட்டார் என்றும் தகவல்கள் பரவியது.
இந்நிலையில் காவல் துறையினர் இன்று(டிசம்பர் 21) காவல் துறையினர் தலைமறைவாக இருந்த பல்லவி பிரஷாந்த் அவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். திடீரென்று கிடைத்துள்ள புகழ் காரணமாக ஏற்பட்ட போதையில் இப்படி நடந்து கொண்ட பல்லவி பிரஷாந்த் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.